இலங்கைக்கு வழங்கப்பட்ட சீனாவின் கொவிட் 19 தடுப்பூசிகளை பெறுவதற்கு சீனர்களே மறுக்கிறார்கள்..!

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கு வழங்கப்பட்ட சீனாவின் கொவிட் 19 தடுப்பூசிகளை பெறுவதற்கு சீனர்களே மறுக்கிறார்கள்..!

இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்காக சீனா வழங்கிய தடுப்பூசிகளை பெறுவதற்கு சீன பிரஜைகளே மறுத்துள்ளதாக அரசாங்க ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் சங்கத்தின் சார்பில் கருத்து தொிவித்திருக்கும்ரவி குமுதேஷ் கூறியுள்ளார். 

எந்தவித அனுமதியும் இல்லாமல் 600,000 சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படுமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

ஆனால் இதுவரை 4000 பேர் கூட குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் இது சந்தகத்தை எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.

Radio