தீவிரமாகும் கொரோனா பரவல்..! 2 ஆயிரத்தை அண்மிக்கிறது தினசரி தொற்றாளர் எண்ணிக்கை, 13 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
தீவிரமாகும் கொரோனா பரவல்..! 2 ஆயிரத்தை அண்மிக்கிறது தினசரி தொற்றாளர் எண்ணிக்கை, 13 மரணங்கள் பதிவு..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான அதிகளவானவர்கள் நேற்று பதிவாகியுள்ளதாக தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் 1923 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிரக்கின்றனர். வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த 10 பேரும் இதனுள் அடங்குகின்றனர். 

மேலும் நாட்டில் நேற்றைய தினம் 13 மரணங்கள் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 709 ஆக உயர்ந்திருக்கின்றது.

Radio