இனியும் தாமதித்தால் நாட்டை முடக்க நோிடும்..! அதிசயம் நிகழ்த்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இனியும் தாமதித்தால் நாட்டை முடக்க நோிடும்..! அதிசயம் நிகழ்த்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

அதிசயங்களை நிகழ்த்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. என சுட்டிக்காட்டியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர், வைத்திய கலாநிதி நவீன் டி சொய்சா எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். 

கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அதிசயங்களை நிகழ்த்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. திவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது கட்டாயமாகும். 

இனியும் தாமதித்தால் முழு நாட்டையும் முடக்க வேண்டி ஏற்படும். உரிய அதிகாரிகள் சிறப்பாகச் செயற்பட்டால் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது இன்னும் சாத்தியமான நிலையிலேயே உள்ளது. தாமதித்தால் நிலைமை கைமீறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Radio