யாழ்.கொடிகாமம் சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று..! 4 வியாபாரிகள், ஒருவர் பிரதேசசபை உறுப்பினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று..! 4 வியாபாரிகள், ஒருவர் பிரதேசசபை உறுப்பினர்..

யாழ்.கொடிகாமம் சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

கொடிகாமம் சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் கடந்த சனிக்கிழமை 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்த மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அவர்களில் 4 பேர் வியாபாரிகள் எனவும் மற்றய நபர் சாவகச்சோி பிரதேசசபை உறுப்பினர் எனவும் தொியவருகின்றது. 

இந்நிலையில் முடக்கப்பட்டிருக்கும் சந்தையை மீள திறப்பது மேலும் தாமதமாகும். என தொிவிக்கப்படுகின்றது. 

Radio