13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சையில்..! வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை தீவிரமடைகிறது..
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731 ஆக பதிவாகியிருந்தது.
எனினும், ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம் முதல் மே மாதத்தின் ஆரம்பம் வரையான குறுகிய காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 824 ஆகக் காணப்படுகிறது.
தற்போதைய நிலையில் வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் விடுதிகளுக்கு அல்லது படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.