முல்லைத்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் – விஜயம் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் – விஜயம் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் கடல் வளத்திற்கும் பாரம்பரிய சிறுதொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருப்பதனால், அவற்றை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று பாரம்பரியமாக நாயாறு பிரதேசத்தில் பாரம்பரியமாக கடற்றொழிலில் ஈடுபட்ட சிலாபம் கருக்குப்பனை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதியை வரையறை செய்யும் பொறிமுறை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நந்திக்கடல் களப்பு புனரமைப்பின் முதற்கட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டப் பணிகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய நீரியல் வள ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா, இரண்டாம் கட்டப் பணிகள் தொடர்பான தமது ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் பெறப்பட வேண்டிய அனுமதிகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்று, முலலைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு கடற்றொழில்சார் விவகாரங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இன்றைய கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு