முதல்வராகும் ஸ்டாலினுக்கு தமிழரசு தலைவர் மாவை வாழ்த்து!

ஆசிரியர் - Admin
முதல்வராகும் ஸ்டாலினுக்கு தமிழரசு தலைவர் மாவை வாழ்த்து!

திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியே தான் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நடைபெற்ற தமிழ் நாட்டின் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையயில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியேதான்.

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கைத் தமிழினமும், தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும் இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம்.

திராவிட இயக்கத் தலைவர் தமிழ் நாட்டு மக்கள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கொள்கை வழி நின்று எதிர்காலத்திலும் தலைவர், தளபதி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் வெற்றிக்கும் உழைத்திட இலங்கைத் தமிழர் தரப்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், வெற்றி பெறவைத்த மக்களுக்கும் எம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Radio