பொலிஸாரை அதிரவைத்த கொள்ளை கும்பல்..! யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவில் 8 இடங்களில் கொள்ளை, யாழ்.சுழிபுரத்தை சேர்ந்தவரே சூத்திரதாரி..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரை அதிரவைத்த கொள்ளை கும்பல்..! யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவில் 8 இடங்களில் கொள்ளை, யாழ்.சுழிபுரத்தை சேர்ந்தவரே சூத்திரதாரி..

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்ச்சியாக 8 இடங்களில் கொள்ளையிட்ட கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று சனிக்கிழமை புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் குறித்த கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்தும் வங்கிகளில் வைப்புக்களில் இருப்பதுமாக சுமார் 50 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இவர்களால் சுமார் 150 பவுண் வரையான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த குற்றச்செயல்களில் பிரதான சூத்திரதாரி 

யாழ்.வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும். இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவருகிறது. 

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்த பிரதான சூத்திரதாரி சுழிபுரம் பகுதியை சேர்ந்த இவருடைய மனைவி, இவருடைய மருமகன் மற்றும் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் 

இவருடைய அக்கா மற்றும் அவருடைய மகன் ஆகியோரே இந்த கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 3 ஆண்களும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும்

அவர்கள் கொள்ளையிடும் நகைகளை குறித்த இரு பெண்களும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துவந்துள்ளதோடு 

கிளிநொச்சி மக்கள் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடைவு வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது. புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற 8 கொள்ளை சம்பவங்களும் 

இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோம்பாவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் சி.சி.ரி.வி காணொளி உதவியுடன் 

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்கவின் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு பொலிஸார் 

மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களால் புதுக்குடியிருப்பில் 8 கொள்ளை சம்பவங்களும், கிளிநொச்சியில் 3 கொள்ளை சம்பவங்களும், 

யாழ்ப்பாணத்தில் 2 கொள்ளை சம்பவங்களும், முல்லைத்தீவில் 2 கொள்ளை சம்பவங்களும் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிசார் குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு