நாட்டில் 10 ஆயிரத்து 372 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சையில்..! சுகாதார அதிகாரிகள் அதிரச்சி தகவல், மேலும் அதிகரிக்கும்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் 10 ஆயிரத்து 372 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சையில்..! சுகாதார அதிகாரிகள் அதிரச்சி தகவல், மேலும் அதிகரிக்கும்..

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

இதுவரை நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,372 ஆகும்.

தொற்று ஆரம்பித்ததில் இருந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்,

இதேவேளை, தற்போது கொழும்பு கிழக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை கொள்ளளவு மட்டத்தை எட்டியுள்ளதாக 

வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார். இந்த வைத்தியசாலையில் 120 நோயாளர்களுக்கே சிகிச்சை அளிக்க முடியும். 

இப்போது இங்கு 116 நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலைமை கொள்ளளவு மட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 8 கட்டில்களும் 

தற்போது நோயாளர்களால் நிரம்பியுள்ளன. இதேவேளை தொற்றுக்குள்ளான பலரை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்புவதற்கு தாமதமாகியுள்ளதால் 

அவர்கள் வீடுகளிலே தங்கியுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு