SuperTopAds

நாட்டில் மோசமாக பரவும் கொரோனா..! மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை..! புதிதாக 3 தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைக்கும் பணி ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் மோசமாக பரவும் கொரோனா..! மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை..! புதிதாக 3 தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைக்கும் பணி ஆரம்பம்..

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைகழகத்தில் புதிதாக 3 தீவிர சிகிச்சை பிரிவுகளை (ICU ) அமைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைக்கப்படவுள்ள மூன்று தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் 24 ஐ.சி.யூ படுக்கைகள், 2 அதி நவீன படுக்கைகள் (எச்.டி.யு படுக்கைகள்) உள்வாங்கப்படவுள்ளன. இது தொடர்பாக ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நேற்றிரவு 

ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். விஜயத்தின் பின்னர் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இத்தீவிர சிகிச்சைப் பிரிவை பராமரிக்க 30 மருத்துவர்கள், 80 தாதியர்கள் மற்றும் 25 இளநிலை பணியாளர்கள் 

 ஆகியோரை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.