யாழ்.நயினாதீவில் தேசிய வெசாக் தினத்தை அமைதியான முறையில், மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் நடத்துவதாக தீர்மானம்..! இன்றைய உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நயினாதீவில் தேசிய வெசாக் தினத்தை அமைதியான முறையில், மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் நடத்துவதாக தீர்மானம்..! இன்றைய உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானம்..

யாழ்.நயினாதீவில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மிக அமைதியானமுறையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

மே மாதம 23ம் திகதி தொடக்கம் 28ம் திகதிவரை தேசிய வெசாக் தினத்தை நயினாதீவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் வெசாக் தினத்தை எப்படி அனுட்டிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல்

இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தன 

மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை அனுசரித்து நிகழ்வில் பங்குபற்றுவோர் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி, 

மிக அமைதியான முறையில் தேசிய வெசாக் தினத்தை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டதாக தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு