யாழ்.நகரில் வீடு புகுந்து தாக்குதல்..! இராணுவ புலனாய்வு பிரிவு தாக்கியதாக குற்றச்சாட்டு, விளக்கம்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் வீடு புகுந்து தாக்குதல்..! இராணுவ புலனாய்வு பிரிவு தாக்கியதாக குற்றச்சாட்டு, விளக்கம்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்..

யாழ்.நகரில் உள்ள தனது வீட்டுக்குள் புகுந்த இராணுவ புலனாய்வு பிரிவினர் தன் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிலிருந்த உடமைகளை சேதப்படுத்தியதாக நபர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து மேற்படி நபர் கூறுகையில், எனது வீட்டிற்கு அருகில் மதுபோதையில் நின்ற இருவர் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாகத் தெரிவித்து வீதியால் சென்ற இருவர் தாக்குதல் நடத்தினர். 

இதன்போது தாக்குதலை விலக்குப் பிடிப்பதற்கு சென்றேன், தாக்குதல் நடத்தியவர்களை நீங்கள் யார் என்று கேட்டதாகற்கு அவர்கள் தாங்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று தெரிவித்து அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தனர். 

அதனை நான் படம் எடுத்தேன். அவர்களது மோட்டார் சைக்கிளையும் படம் எடுத்தேன். இந்தநிலையில், அன்றைய தினம் இரவு 7 மணியளவில் 7 - 8 மோட்டார் சைக்கிளில் வந்த 15 - 20 பேர் என் மீது தாக்குதல் நடத்தினர். 

எனது கைப்பேசி எங்கே என்று கேட்டனர். நான் கொடுக்க மறுத்தபோது அதனைப் பறித்து எடுத்துச் சென்றனர். எனது சங்கிலியையும் பறித்துச் சென்றனர். வீட்டிலிருந்த பொருள்களால், போத்தல்களால் என் மீது மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. உடனேயே யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்றேன். அவர்கள் மறுநாள் காலையில் (திங்கட்கிழமை) வருவதாகத் தெரிவித்தனர்.

மறுநாள் காலையில் சிவில் உடையில் வந்த பொலிஸார், வீட்டில் பொருள்கள் உடைந்திருந்ததைப் படம் எடுத்தனர் என்றும், அதன் பின்னர் அந்தப் பொருட்களை வாங்கித் தந்தால் போதுமானது என்ற கோணத்திலேயே கதைத்தனர்.

மேலும் முறைப்பாடையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதேவேளை சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கையை ஆரம்பித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ், யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, 

வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு