படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம், ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு நாள் யாழ்.ஊடக அமையத்தில்..

ஆசிரியர் - Editor I
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம், ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு நாள் யாழ்.ஊடக அமையத்தில்..

படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு நாள் யாழ்.ஊடக அமையத்தில் இன்று அனுட்டிக்கப்பட்டது. 

இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, 

மலர் தூபி , சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.ஊடகவியலாளரான தராகி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி 

கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் 

படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்தவேளை 

கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் கொரோனோ தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள், மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், 

கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் நலம் பெற வேண்டியும். கொரோனோ தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு