SuperTopAds

சுகாதார நடைமுறைகளை மீறி நீதிமன்றம் முன் குவிந்து நின்ற பொதுமக்கள்..! சுகாதாரதுறை வேடிக்கை..

ஆசிரியர் - Editor I
சுகாதார நடைமுறைகளை மீறி நீதிமன்றம் முன் குவிந்து நின்ற பொதுமக்கள்..! சுகாதாரதுறை வேடிக்கை..

கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அதிகளவில் கூடியிருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. 

இன்று காலை முலதல் கிளிநொச்சி பொலிசார் முக கவசம் அணியாது நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தலை ஒலிபெருக்கு மூலம் விடுத்து வருகின்றனர். 

ஆயினும் பொது மக்கள் கொவிட் 19 அச்சுறுத்தல் தொடர்பில் கவலையின்றி செயற்பட்டு வருகின்றனர். இன்று காலைமுதல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்பாக 

இவ்வாறு பெருந்திரளான மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து காணப்பட்டனர்.நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக வருகை தந்த மக்களை 

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உள்ளே அனுமதித்துள்ளது. பிணை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த மக்கள் இவ்வாறு நீதிமன்ற வெளி வளாகத்தில் கூடி நிற்கின்றனர். 

ஏ9 வீதியில் இவ்வாறு கூடி நிற்கும் மக்களை சுகாதார தரப்பினர் கட்டுப்டுத்த அல்லது மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பலரும் எதிர்பார்கின்றனர்.

இன்றைய தினம் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த மக்கள் குவிந்து நின்ற சூழலில் கொவிற் தொற்றாளர் ஒருவர் அங்கு வருகைதரும் பட்சத்தில் வேகமாக பரவக்கூடிய சூழல் நிலவியதை அவதானிக்க முடிந்தது. 

குறித்த நிலையை கட்டுப்படுத்தி பாதுகாப்பான சூழலை மாவட்டத்தில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.