இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா..! அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு...

இலங்கையில் இன்று மட்டும் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
இதுவே இலங்கையில் ஒரு நாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர் எண்ணிக்கையாகும். மேலும் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இன்றுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 94 ஆயிரத்து 586 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், 647 பேர் தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர்.