யாழ்.மாவட்டத்தில் மத வழிபாட்டு தலங்களில் சுகாதார நடைமுறைகள் துளி அளவும் பின்பற்றப்படவில்லை..! மாவட்ட செயலர் கவலை..

யாழ்.மாவட்டத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் எவற்றிலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. என கூறியிருக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன், மக்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் கருத்து,
இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய சுகாதார நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
வழிபாட்டு இடங்களில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் வழிபாட்டு இடங்களில் இந்த நடைமுறையினை பொதுமக்கள் அனுசரித்துச் செல்லவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த அலட்சியத்தை விடுத்து சுகாதார நடை முறைகளை அலட்சியம் செய்யாது பொதுமக்கள் செயற்படவேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த சுகாதார நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆலயங்களில் 50 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த விடயங்களை ஆலய பரிபாலன சபையினர்.மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கண்காணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வழிபாட்டு இடங்களில் இறுக்கமான நடைமுறையினை பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என்றார்.