யாழ்.மாவட்டத்தில் கட்டுப்பாட்டை மீறி இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள்..! நடவடிக்கை மோசமாக இருக்கும் என மாவட்ட செயலர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கட்டுப்பாட்டை மீறி இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள்..! நடவடிக்கை மோசமாக இருக்கும் என மாவட்ட செயலர் அறிவிப்பு..

தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி யாழ்.மாவட்டத்தில் நிகழ்வுகள், தனியார் கல்வி நிலையங்கள் நடத்தப்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி கலந்துரையாடலிலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரவலாக மாவட்டத்தில் பல இடங்களிலும் தனியார் கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதாக மக்களே கூறியுள்ளனர். இது குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

தீர்மானங்களை மீறும் வகையில் பல தனியார் கல்வி  நிலையங்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கூட பின்பற்றாமல் நடப்பது குறித்து எனக்கு அடுக்கடுக்காக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இருந்தும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மீண்டும் கேட்பதுடன், இன்று தொடக்கம் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் பின் நடவடிக்கை தீவிரமாக இருக்கும். எனவும் மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு