யாழ்.ஊர்காவற்றுறை பாடசாலையில் ஆசிரியை மற்றும் அதிபரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு இலக்கான மாணவன் போதனா வைத்தியசாலையில் அனுமதி, பொலிஸ் விசாரணை ஆரம்பம்..

யாழ்.ஊர்காவற்றுறையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை மற்றும் அதிபரின் தாக்குதலுக்குள்ளான பாடசாலை மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றய தினம் 7 மணியளவில் குறித்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன்,
போதனா வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள்
இன்று காலையே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.