வவுனியா மாவட்டத்தில் கொரோனா தெற்று பரவல் அதிகரிப்பு..! மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி அவசரமாக கூடியது, புதிய கட்டுப்பாடுகள் அமுல்..
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணி இன்று காலை அவசரமாக கூடி தற்போதைய நிலவரம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் நகரசபை அதிகாரிகள் , சுகாதார அதிகாரிகள், இரானுவத்தினர் ,
பொலிஸ் அதிகாரிகள் , மாவட்ட செயலக உயர் குழுவினர் , வர்த்தக சங்கத்தினர் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரின் பங்கு பற்றுதலுடன் இக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது பல்வேறு வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பல்வேறு நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கை உட்பட பிரத்தியோக வகுப்புக்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது, கழியாட்ட நிகழ்வுகளுக்கு தடை , மங்களகரமான மற்றும் துக்ககரமான நிகழ்வுகளுக்கு 150 நபர்கள் மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன்
இவைகள் அவ்விடத்தில் 50 வீதமாக இருத்தல் வேண்டும். உணவகங்களின் இருக்கைகள் 50வீதமாக மாற்றப்படுதல் , நீச்சல் தாடாகம் பூட்டு , சிறுவர் பூங்கா பூட்டு போன்ற பல்வேறு திர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தக நிலையங்களில் ஊழியர்கள் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் வாடிக்கையாளர்கள் கை சுத்தம் செய்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தி வழங்கப்படுதல் கட்டாயமாகும் மேலும் பொதுமக்களும் சீரான முறையில் முகக்கவசம் அணிவது அவசியமாகும்.
இவ்விடயங்களை மீறி செயற்படுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்துடன் வவுனியா மாவடத்தில் தங்கியிருந்து பணியாற்றும் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் செல்ல முடியுமெனவும்
இவ் நடைமுறைகள் மறுஅறிவித்தல் வரை நடைமுறையில் இருக்குமெனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.