மிக குறைந்த செயற்பாடுடைய 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில், சம்மந்தன். திலீபன், பிள்ளையான் உள்ளடக்கம்..!
நாடாளுமன்றில் குறைந்த செயற்பாட்டை உடைய 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை மந்திரி.எல்கே அமைப்பு பட்டியலிட்டிருக்கின்றது.
குறித்த பட்டியலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். மந்திரி.எல்கே அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலில் பொதுஜன பெரமுன, சமகி ஜன பலவேகய, தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி அகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
மேலும் இரா.சம்மந்தன், சிவநேசத்துரை சந்திரகாந்தன், குலசிங்கம் திலீபன் ஆகிய 3 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.