கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு..! தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை..
நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் ஐடிஎஸ் (தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில்) இடவசதி மற்றும் வளங்கள் போதுமானதாக இல்லை. என வைத்தியசாலை பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், மருத்துவமனையில் 120 நோயாளிகளுக்கே போதுமானது. ஆனால் தற்பொது 138 கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 8 படுக்கைகளும் நிரம்பியிருக்கின்றது என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை சுமார் 20 சதவீத நோயாளிகட்கு ஒட்சிசன் வழங்கப்படுவதுடன் ஒட்சிசனின் தேவை அதிகரித்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது. சித்திரைப் புத்தாண்டின் பின்பே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சந்தன கஜநாயக்க கொவிட் தொற்று அதிகரிப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையில், தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்கள்
சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்றும் இதுபோன்ற சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.