சித்திரா பெளர்ணமி தினத்தில் விரத அனுட்டானங்களுக்கு தடை ஏற்படுத்தவேண்டாம்..! குடும்பநல உத்தியோகஸ்த்தர்களுக்கான கருத்தமர்வு இரத்து..

சித்திரா பெளர்ணமி தினத்தில் யாழ்.மாவட்ட மருத்துவ சங்கத்தினால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்த குடும்பநல உத்தியோகஸ்த்தர்களுக்கான கருத்தரங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 26ஆம் திகதி திங்கட்கிழமை சித்திரா பௌர்ணமி தினத்தில் நடத்துவதால் விரதம் இருப்பவர்கள் பொிதும் பாதிக்கப்படுவார்கள். என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் குறித்த விடயத்தில் தலையீடு செய்த நிலையில் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.
தாயை இழந்தவர்கள் அனுஷ்டிக்கும் சித்ரா பெளர்ணமி விரத நாளில் வடக்கு மாகாண சுகாதார சுகாதார பணிப்பாளரின் கையொப்பத்துடன் 25 மற்றும் 26 திகதிகளில்
சித்திரா பௌர்ணமி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் குறித்த கல்விக் கருத்தரங்கை பிறிதொரு திகதிக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.