சித்திரா பௌர்ணமி தினத்தில் கருத்தரங்கு..! மாகாண சுகாதார பணிப்பாளரின் செயற்பாட்டினால் விசனம்..

சித்திரா பெளர்ணமி தினத்தில் மாகாண சுகாதார அமைச்சினால் கல்விக் கருத்தரங்கு ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த கருத்தரங்கு எதிர்வரும் 26ம் திகதி யாழ்.மாவட்ட குடும்பநல உத்தியோகஸ்த்தர்களுக்காக யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தினால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு ள்ள கருத்தரங்கிற்கு
மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அழைப்பு வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் குறித்த கருத்தரங்கு நடாத்த ஏற்பாடு செய்திருப்பதுடன்
பங்குபற்றும் அனைவருக்கும் மதிய போசனமும் வழங்கப்படுவதாகவும் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாயை இழந்தவர்கள் அனுஷ்ட்டிக்கும் சித்ரா பெளர்ணமி விரத தினத்தில்
கருத்தரங்கு நடத்தப்படுவது தொடர்பிலேயே இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.