யூனியன் கல்லுாரிக்கு ஆதனத்தை பொறுப்பளித்து கட்டளை வழங்கியது மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்..!

ஆசிரியர் - Editor I
யூனியன் கல்லுாரிக்கு ஆதனத்தை பொறுப்பளித்து கட்டளை வழங்கியது மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்..!

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லுாரியின் பராமரிப்பில் உள்ள வீடு மற்றும் காணியை கல்லுாரிக்கு பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. 

மேலும் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் அமொிக்கன் இலங்கை மிஷன் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பிணைமுறியில் நீதிமன்றம் விடுவித்துள்ளதுடன், 

அடுத்துவரும் 6 மாதங்களுக்குள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால் பிணை பணத்தை செலுத்தவேண்டும். என மன்று கட்டளை வழங்கியுள்ளது. 

தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி சுற்றாடலில் உள்ள வீடு மற்றும் காணியை அமொிக்கன் இலங்கை மிஷன் உரிமை கோரும் நிலையில் அந்த சொத்து தமக்குரியது என அமொிக்க மிஷன் கூறியுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கும், அமொிக்கன் இலங்கை மிஷன் சார்ந்தவர்களுக்குமிடையில் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில், 

இதனையடுத்து பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் மேற்படி கட்டளையை வழங்கியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு