யாழ்.பருத்துறை - அல்வாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேர் கைது..!

யாழ்.பருத்துறை - அல்வாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடள் தொடர்புடைய சந்தேகத்தில் 4 பேர் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அல்வாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 5 பேர் படுகாயமடைந்திருந்தனர். படுகாயமடைந்திருந்த 5 போில் 4 பேரே கைது செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கொலை சந்தேகத்தில் தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டிருப்பதுடன், மற்றய இருவரும் குழு மோதலில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு
சிறைச்சாலை பாதுகாவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.