சீ.வி.விக்னேஸ்வரனை சம்மந்தன் அழைத்துவந்தாரா..? அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்கிறார் மாவை..

ஆசிரியர் - Editor I
சீ.வி.விக்னேஸ்வரனை சம்மந்தன் அழைத்துவந்தாரா..? அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்கிறார் மாவை..

மாகாணசபை தேர்தலில் பெற்ற வாக்களில் 4ல் ஒரு பங்கை கூட நாடாளுமன்ற தேர்தலில் பெற முடியாத சீ.வி.விக்னேஸ்வரன் என்னை விமர்சிப்பது குறித்து நான் கவலையடைகிறேன். என கூறியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, 

நீதிபதியாக இருந்தபோது விக்னேஸ்வரன் எமக்கு செய்த உதவிகளுக்கு நன்றிக்கடனாகவே முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க நான் சம்மதம் தொிவித்திருக்தேன். தன்னை சம்மந்தன் அழைத்துவந்தார் என விக்னேஸ்வரன் கூறுவது பொய் எனவும் சாடியுள்ளார். 

இன்றைய தினம் திங்கட்கிழமை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், சகா தமிழ் கட்சிகள் என்னை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு ஆலோசனை முன்வைத்தனர். 

அதேநேரம் எமது கட்சியின் வெளிச் செயற்பாட்டாளர்கள் விக்னேஸ்வரன் பெயரை பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தனர். நான் பதவிகளுக்காக ஆசைப்பட்டவன் அல்ல. போராட்டப் பாதையை கடந்து வந்தவன். அந்த வகையில் 1978 அரசியல் யாப்புக்கு எதிரான போராட்டத்தில் 

கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டடோம். அக் காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்ட எமக்கு பிணை வழங்கினார்.அவர் செய்த நன்றி கடனுக்காக அவரது பெயரை ஏற்றுக்கொண்டு 

சக கட்சிகளுடன் பேசி முடிவெடுத்தோமே தவிர சம்பந்தன் அவரைக் அழைத்து வரவில்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட விக்னேஸ்வரன் ஒரு லட்சத்துக்கு அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சரானார்.

பின்னர் தனியான ஒரு கட்சியை ஆரம்பித்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 21 ஆயிரம் விருப்பு வாக்குகளை மட்டுமே அவரால் பெற முடிந்தது இந்நிலையில் தனியான ஒரு கட்சியில் இருந்து கொண்டு விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதி போதாது என தெரிவிப்பது எனக்கு கவலை அளிக்கின்றது. 

என அவர் மேலும் தெரிவித்தார்.

Radio