பல கோடி ரூபாய் பெறுமதியான “ஆம்பர்” எனப்படும் அரியவகை பொருளுடன் தென்னிலங்கையை சேர்ந்த 4 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
பல கோடி ரூபாய் பெறுமதியான “ஆம்பர்” எனப்படும் அரியவகை பொருளுடன் தென்னிலங்கையை சேர்ந்த 4 பேர் கைது..!

கடலில் கிடைக்கும் “ஆம்பர்” எனப்படும் பெருமளவு பெறுமதியான அரியவகை பொருளுடன் தென்பகுதியை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இன்று காலை 2 கிலோ 500 கிராம் நிறைகொண்ட பெறுமதியான ஆம்பர் எனப்படும் அரியவகையான பொருளினை முல்லைத்தீவில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார்கள்.

வட்டுவாகல் பாலத்தில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அனுராதபுரம் புத்தளம் பகுதியினை சேர்ந்த சிங்கள இனத்தவர்களே 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் கைதானவர்களும் குறித்த அரியவகை பொருளும் முல்லைத்தீவு பொலீஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் 

இது தொடர்பான சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டுள்ளார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு