வேட்டையாடி பிடிக்கப்பட்ட 5 உடும்புகளுடன் ஒருவர் கைது..! வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
வேட்டையாடி பிடிக்கப்பட்ட 5 உடும்புகளுடன் ஒருவர் கைது..! வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது..

கிளிநொச்சி - வட்டக்கச்சி புதுக்காடு பகுதியில் 5 உடும்புகளுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சியாக்குவதற்கு தயாராக வைத்திருந்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்டு 5 உடும்புகளை மீட்டு சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கிளிநொச்சி நீதவானின் உத்தரவிற்கமைய, உடும்புகள் சுண்டிக்குளம் சரணாலயத்தில் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டன.

Radio