SuperTopAds

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம் மற்றும் இ.போ.ச தலமைகளின் உத்தரவு காற்றில் பறந்தது..! பேருந்து இன்றி அந்தரிக்கும் மாணவர்கள், நடவடிக்கை எடுப்பாரா அங்கஜன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம் மற்றும் இ.போ.ச தலமைகளின் உத்தரவு காற்றில் பறந்தது..! பேருந்து இன்றி அந்தரிக்கும் மாணவர்கள், நடவடிக்கை எடுப்பாரா அங்கஜன்..

வடபிராந்திய இ.போ.ச சாலையில் சாரதிகள், நடத்துனர்கள் உட்பட 33 பேருக்கு அலுவலக கடமைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கான பேருந்து சேவையை நடத்துவதில் பாரிய சிக்கல் உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  இ.போ.ச கோண்டாவில் சாலையின் தலைமை அலுவலகத்தில் சாரதிகள், நடத்துனர்கள் 33 பேருக்கு சேவைக் காலத்தை அடிப்படையாக வைத்து அலுவலகத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.சாலையில் இருந்து சுமார் 85 பேருந்து சேவைகள் யாழ்ப்பாணம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடுகின்ற நிலையில் பெரும்பாலும் காப்பாளராக கடமையாற்றி அவர்கள் அலுவலகத்தில் கடமையாற்றுவதால் தற்போது 65 வரையான பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன.

யாழ்.மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் இ.போ.ச பஸ்ககள் சேவையில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக பாடசாலை அதிபர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இ.போ.ச பஸ் சேவைகள் ஒழுங்காக இடம்பெறாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அபிவிருத்திக் குழுவில் பேருந்து சேவைகளை பூரணமாக நடத்துமாறு பணிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், 

குறித்த கூட்டத் தீர்மானம் இ.போ.ச தலமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் யாழ்.சாலை அலுவலகத்தில் 20பேரை மட்டும் கடமையாற்றுமாறு ஏனையோரை முன்னைய பணிக்கு திரும்புமாறு இ.போ.சபையன் வட மாகாண செயலாற்றும் முகாமையாளர் எ.ஜே.லெம்பேட் வடபிராந்திய இ.போ.சவுக்கு பணித்திருந்தார். 

 இருந்தபோதும் குறித்த தீர்மான நடைமுறைக்கு வரவில்லை. ஆகவே குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளின் தலையீடு செய்து மக்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவையை ஒழுங்குபடுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.