வீடு புகுந்த வாள்வெட்டு கும்பல் தாக்குதல்..! இருவர் படுகாயம், வீடு சேதமாக்கப்பட்டது, பொலிஸார் தீவிர விசாரணை..

வாள்கள், கத்திகளுடன் வீடு புகுந்த வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வீடு சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் வவுனியா - மஹாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
நேற்றய தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் வீட்டையும் சேதமாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் உடனடியாக அவர்கள் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் விசாரணைகளை நடாத்தியதுடன், தலைக்கவசம் ஒன்றையும், கத்தி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
மேலும் விசாரணைகளையும் தொடர்ந்துள்ளனர்.