SuperTopAds

இராணுவ சோதனை சாவடியை இடித்து தள்ளிய மரக்கடத்தல் கும்பல்..! இரு இராணுவ சிப்பாய்கள் படுகாயம், ஓமந்தையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
இராணுவ சோதனை சாவடியை இடித்து தள்ளிய மரக்கடத்தல் கும்பல்..! இரு இராணுவ சிப்பாய்கள் படுகாயம், ஓமந்தையில் சம்பவம்..

இராணுவ சோதனை சாவடியை இடித்து தள்ளிய கடத்தல்காரர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகி நின்ற நிலையில் சாரதி தப்பி ஓடியுள்ளார். சம்பவத்தில் இரு இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் ஓமந்தை சோதனை சாவடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வவுனியா நோக்கி சென்ற வாகனத்தினை  இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர். 

இதன்போது வாகனம் நிறுத்தாமல் சென்றதுடன், கடமையில் இருந்து இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர். இதனால் நீண்டதூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் 

வீதியில் வீசப்பட்டநிலையில் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களிற்குள்ளாகியுள்ளார். காயமைடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி தப்பித்து சென்றுள்ளார். அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் குறித்த வாகனத்தில் சட்டவிரோதமாக மரங்கள் கடத்தி செல்லப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.