SuperTopAds

மணல் கடத்தல்காரர்களின் தாக்குதலுக்கு இலக்கான விசேட அதிரடிப்படை வீரர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி, சம்பவ இடத்தில் பதற்றமான சூழல்..

ஆசிரியர் - Editor I
மணல் கடத்தல்காரர்களின் தாக்குதலுக்கு இலக்கான விசேட அதிரடிப்படை வீரர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி, சம்பவ இடத்தில் பதற்றமான சூழல்..

யாழ்.வடமராட்சி - முள்ளி பகுதியில் இன்று அதிகாலை மணல் கடத்தல்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழப்படுவது தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மணல் கடத்திவந்த வாகனம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் ஆணி கட்டடைகளை போட்டு வழிமறிக்க முயன்றுள்ளனர். இதன்போது மணல் கடத்தல்காரர்கள் 

அதிரடிப்படையின் உத்தரவை மீறி பயணித்துள்ளதாகவும், வழிமித்த அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் மணல் கடத்தல்காரர்களின் தாக்குதலுக்கு இலக்கான அதிரடிப்படை வீரர் ஒருவர் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பெருமளவில் அதிரடிப்படையினர், இராணுவம்மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. 

பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.