SuperTopAds

அரசின் வீட்டுத்திட்டத்தை நம்பி தற்காலிக வீட்டை இடித்த குடும்பம்..! மழை வெள்ளத்திற்குள் கிடந்து அந்தரிக்கும் நிலை..

ஆசிரியர் - Editor I
அரசின் வீட்டுத்திட்டத்தை நம்பி தற்காலிக வீட்டை இடித்த குடும்பம்..! மழை வெள்ளத்திற்குள் கிடந்து அந்தரிக்கும் நிலை..

வீட்டுத்திட்டம் கிடைத்த நம்பிக்கையில் இருந்த தற்காலிக வீட்டையும் இடித்த குடும்பம் தற்போது இருக்க வீடில்லாமல் நேற்றய தினம் பெய்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் பளை - முல்லையடி கிராமத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

கடந்த அரசாங்கத்தினால் குறித்த குடும்பத்தினருக்கு 2019ம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருந்தது. 

தமது சொந்த செலவில் தமக்கென ஒரு தற்காலிக வீடு ஒன்று அமைத்து அதில் தங்கியிருந்த குடும்பம் தமக்கு கிடைத்த வீட்டுத்திட்டத்தையடுத்து 

புதிய வீடு கட்டுவதற்காக இருந்த தற்காலிக வீட்டையும் இடித்துள்ளனர். தமக்கு கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டமானது விரைவில் முடிவடையும் என்ற நம்பிக்கையில் 

சிறிய தற்காலிக குடிசை ஒன்று அமைத்திருந்தனர். இருப்பினும் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் தமது புதிய வீடும் பாதியில் நிற்க, 

இருந்த வீட்டையும் இடித்த நிலையில் சிறு கொட்டகையில் தானும் தனது மனைவி இரு பிள்ளைகளுடன் பெரும் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது பெய்த மழையினால் தமது மேல் கூரை முழுவதுமாக மழை நீர் ஒழுகி குடிசை முழுவதுமாக தண்ணீர் வந்துள்ளது. 

தமக்கு இதுவரையில் யாரும் வந்து எந்த விதமான உதவியும் செய்ததில்லை எனவும் தெரிவிக்கின்றனர். 

கடந்த வருடங்களாகவே இதே நிலையில்தான் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தம்மால் பல கடிதங்கள் தரப்பால் ஒன்று தருமாறு 

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு கிராம உத்தியோகத்தர் ழூலமாக கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 

இதுவரையில் எந்த ஒரு உதவியும் கிடைக்கப்பெறாமல் அல்லல்படுவதாக தெரிவிக்கின்றனர்.