SuperTopAds

முள்ளிவாய்க்காலில் இராணுவம் மீது மோதிய வாகனம்..! இராணுவ சிப்பாய் பலி, வாகன சாரதி தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்காலில் இராணுவம் மீது மோதிய வாகனம்..! இராணுவ சிப்பாய் பலி, வாகன சாரதி தப்பி ஓட்டம்..

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருதாவது, ஹெப்பற்றிக் கொலாவ பகுதியினை சேர்ந்த 37 அகவையுடைய படையினர் விடுமுறையில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்தவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் 

கப் வாகனம் மோதித்தள்ளி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது இதன் போது காயமடைந்த படையினன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்பொது மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டபோது 

அங்கு சிகிச்சை பலனின்றி 13.04.21 இன்று உயிரிழந்துள்ளார். இந்த விபத்தினை ஏற்படுத்திய கப் சாரதி வாகனத்தினை விட்டு தப்பிஓடியுள்ளார். விபத்து குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் 

வாகனம் முல்லைத்தீ பொலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து சாரதியினை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.