யாழ்.திருநெல்வேலி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக தொடர்கிறது..! விடுவிப்பு அறிப்பு கிடைக்கவில்லையாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக தொடர்கிறது..! விடுவிப்பு அறிப்பு கிடைக்கவில்லையாம்..

யாழ்.திருநெல்வேலி - பாற்பண்ணை பகுதியில் பாரதிபுரம் கிராமம் தவிர்ந்த மற்றய பகுதிகள் விடுவிக்கப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்திருந்தபோதும், தொடர்ந்தும் காண்காணிப்பு வலயமாகவே உள்ளது. 

திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள ஒரு தொகுதி வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை தொடக்கம் பாற்பண்ணை பகுதியில் பாரதிபுரம் கிராமம் தவிர்ந்த மற்றய பகுதிகள் கண்காணிப்பு வலயத்திலிருந்து நீக்கப்படும். 

எனவும் கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதி மக்கள் தமது அன்றாட கடமைகளை வழக்கம்போல் மேற்கொள்ளலாம். எனவும் அறிவித்திருந்தார். எனினும் இன்று பிற்பகல் வரை இராணுவம் மற்றும் பொலிஸார் வெளியேறாததுடன், 

மக்களின் நடமாட்டம் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். கடந்த மாதம் 28ம் திகதி திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை

சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் திருநெல்வேலி ஜே 114 கிராம சேவகர் பிரிவு கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றில்லாதவர்களின் வர்த்தக நிலையங்கள், 

திறக்கப்பட்டுள்ளதுடன், சந்தை வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாரதிபுரம் தவிர்ந்த மற்றய பகுதிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையிலேயே தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் இறுக்கமாக இருக்கும் நிலையில் தமக்கு விடுவிப்பதற்கான கட்டளை கிடைக்கவில்லை. என இராணுவம் மற்றும் பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு