விடுமுறை நாட்களிலும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு நடக்கவேண்டும்..! அதிகாரிகள் சிலரின் அசமந்தபோக்கை தொடர்ந்து டக்ளஸ் அதிரடி..

ஆசிரியர் - Editor I
விடுமுறை நாட்களிலும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு நடக்கவேண்டும்..! அதிகாரிகள் சிலரின் அசமந்தபோக்கை தொடர்ந்து டக்ளஸ் அதிரடி..

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகள் மற்றும் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு 5 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்நிலையில் இன்று காலை தொடக்கம் நாடு முழுவதும் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்றபோதும் யாழ்.மாவட்டத்தில் எந்த தடையும் இல்லாமல், 

கொடுப்பனவுகள் நடைபெறும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் சில பிரதேச செயலக அதிகாரிகள் மக்களுக்கான கொடுப்பனவை வழங்குவதில் அசமந்தமாக நடந்துகொண்ட நிலையில், 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிட்டு கொடுப்பனவு மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்தும் வழங்கப்படவேண்டும். என அறிவித்துள்ளதுடன், புத்தாண்டு விடுமுறை என்பபோது கொடுபனவுகள் வழங்கப்படவேண்டும். 

என பணித்துள்ளார். மேலும் குறித்த 5 ஆயிரம் ருபாய் கொடுப்பனவு வழங்கலில் குறைபாடுகள் இருப்பின் அதனை தமது கவனத்திற்கு கொண்டுவருமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு