அரச காணியில் 750 லோட் கிரவல் மண் அகழ்ந்து மாட்டிய கிராம சேவகர்..! மனைவி கைது, கிராம சேவகரிடம் பொலிஸார் விசாரணை..

ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் - மானுருவி பகுதியில் சட்டவிரோதமாக கிரவல் மண் அகழ்ந்த கிராம சேவகரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராம சேவகரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
மானுருவி கிராமத்தில் காணி அனுமதி பத்திரம் இல்லாத காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிரவல் அகழ்ந்து சுமார் 750 டிப்பர் லோட் கிரவல் மண்ணை காணி ஒன்றில் சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் குறித்த காணியை முற்றுகையிட்டு,
காணிக்கு உரிமைகோரிய கிராமசேவகரின் மனைவியை கைது செய்துள்ளதுடன், கிராம சேவகரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர்.