மாகாண கல்வியமைச்சின் செயலாளர் நினைத்திருந்தால் பிரச்சினை சுமுகமாக தீர்த்திருக்கலாம்..! வெள்ளை அங்கி அணிந்த ஒரு சிலரின் செயற்பாட்டால் மனம் வருந்துகிறேன்..

ஆசிரியர் - Editor I
மாகாண கல்வியமைச்சின் செயலாளர் நினைத்திருந்தால் பிரச்சினை சுமுகமாக தீர்த்திருக்கலாம்..! வெள்ளை அங்கி அணிந்த ஒரு சிலரின் செயற்பாட்டால் மனம் வருந்துகிறேன்..

வெள்ளை அங்கி அணிந்த ஒரு சிலரின் செயற்பாடுகளால் நான் மனம் வருந்துகிறேன். என கூறியிருக்கும் பேராயர் டானியல் தியாகராஜா, கல்வியமைச்சின் செயலாளர் நினைத்திருந்தால் பிரச்சினையை சுமுகமாக தீர்த்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். 

தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி விவகாரம் தொடர்பாக வட்டுக்கோட்டையில் உள்ள ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதனூடாக வந்த செய்திகளை பார்த்துக் கவலை அடைந்தேன்.தென்னிந்திய திருச்சபையின் பேராயராக நான் இருக்கின்ற நிலையில் 

எம்மில் இருந்து பிரிந்த சிலர் தமக்கான ஒரு சபையை ஆரம்பித்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியுடன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தென்னிந்திய திருச்சபையுடன் எவ்வித தொடர்பும் அற்றவர்கள் என 

வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்குத் தெரியப்படுத்தியும் எம்முடன் பேசி சுமுகமான முடிவை எடுக்க முயற்சிக்கவில்லை. தற்போது தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்றுவரும் பிரச்சினைக்குரிய இடமான அமெரிக்க மிஷன் 

குருமார்கள் தங்கிய வீட்டின் அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது.1816 ஆம் ஆண்டு யாழ்.வந்த குருமார்கள் தங்கிய இடம் யூனியன் கல்லூரியில் காணப்படுகின்ற புராதன கட்டடம் அதனையே சில வெள்ளை அங்கியினர் அடாத்தாக தம் வசம் இழுப்பதற்கு முயல்கின்றனர். 

மிஷனரிமாரின் பின்னர் எமது சுதேசிகள் அமெரிக்கன் மிஷன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளை மேற்பார்வை செய்து வழி நடத்தி வந்தனர். அவ்வாறு மேற்பார்வை செய்தவர்கள் தங்குவதற்கான இல்லமாக இந்தப் புராதன கட்டடம் வழங்கப்பட்டு வந்தது. 

அரசாங்கத்திடம் யூனியன் கல்லூரியை ஒப்படைத்து போராயராக அதற்கு மாற்றாக காணி ஒன்றை வழங்கி இல்லத்தை எமக்கு தர வேண்டும் என அரசாங்கத்துடன் கோரிக்கை வைத்து பெற்றுக் கொண்டோம். 

பிரச்சினைகள் எழும்போது உரியவர்களுடன் அனுகி சுலபமாக அதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். யூனியன் கல்லூரியில்அமைந்துள்ள பழைய குருமார்கள் தங்கிய இல்லம் பின்னர் அதிபர்கள் மனையாக பயன்படுத்திய இடங்களை 

குறித்த பாடசாலையின் பாவனைக்காக வழங்குவதில் எமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவற்றை அவர்களுக்கு வழங்கி விடவேண்டும் அல்லது அவர்களுக்குத்தான் உரியது என வாதிடுவது தவறாகும்.

ஏனெனில் அது எமது பாரம்பரிய சொத்து அதனை யாருக்கும் நாம் வழங்கிவிட முடியாது. ஆகவே வரலாறு தெரியாதவர்களும் வரலாற்றை அறிய விரும்பாதவர்களும் செய்யும் ஒரு சில காரியங்கள்  மதங்களுக்கிடையில், மனங்களுக்கிடையில் கசப்புணர்வை ஏற்படுத்துகிறது, 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு