சுகாதார நடைமுறைகளை மக்கள் மதிப்பதே இல்லை..! நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவிப்பு, பொதுமக்களே அவதானம்..

ஆசிரியர் - Editor I
சுகாதார நடைமுறைகளை மக்கள் மதிப்பதே இல்லை..! நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவிப்பு, பொதுமக்களே அவதானம்..

நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் மிக மோசமாக மீறுகிறார்கள். என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று முதல் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளும் சுற்றுநிரூபமொன்றை பொலிஸ் தலைமையலுவலகம் 

அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் அனுப்பிவைத்துள்ளது. இந்த சுற்றுநிரூபத்தின் கீழ் இன்று முதல் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அனேகமானவர்கள் முகக்கவசம் இல்லாமல் நடமாடுகின்றனர்.

சமூகவிலக்கலை கடைப்பிடிப்பதில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹோட்டல்களும் ஏனைய நிறுவனங்கள் ஸ்தாபனங்களும் இந்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு