யாழ்.திருநெல்வேலி முடக்கிலில் இருந்து விடுவிக்கப்பட்டது..! வெறும் 55 வியாபாரிகளுக்கு மட்டும் சந்தையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி முடக்கிலில் இருந்து விடுவிக்கப்பட்டது..! வெறும் 55 வியாபாரிகளுக்கு மட்டும் சந்தையில் அனுமதி..

யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று காலை முடக்கலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தையில் வழமையாக 300இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடும் நிலையில் பீ.சி.ஆர் அறிக்கையின் அடிப்படையில் இன்று 55 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 14 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று  இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த 

ஏனைய கடைகளை இன்று காலை முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. மேலும் பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படாத உரிமையாளர்கள் 

மற்றும் பணியாளர்களை கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று கட்டுபாடு விதிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே பீ.சி.ஆர் அறிக்கையின் வைத்துள்ள வியாபாரிகள் மட்டும் இன்று வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு