யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்பு திருடர்களாம்..! விருந்தில் அதிகாரிகள் மயக்கம், கேள்வி கேட்டவருக்கு 33 மாதம் சம்பளம் கட்...

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்பு திருடர்களாம்..! விருந்தில் அதிகாரிகள் மயக்கம், கேள்வி கேட்டவருக்கு 33 மாதம் சம்பளம் கட்...

யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள சுமார் 100 கோடிக்கும் மேல் பெறுமதியான பாரிய இயந்திரங்கள் மற்றும் கொள்கலன்கள் இரும்புக்காக விற்கப்படுவதாக லங்கா சிமென்ட் தொழிற்சாலையின் பொறுப்பதிகாரி பொன்னையா விமலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், திறந்த கேள்வி கோரல் செய்யப்படாமல், சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான பாரிய இயந்திரங்கள் மற்றும் கொள்கலன்கள்

தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்படுகின்றது. குறித்த நடவடிக்கைக்கு கொழும்பில் உள்ள சில அதிகாரிகளும் தெல்லிப்பழை பிரதேச செயலரும் உடந்தையாக உள்ளனர். என பொன்னுத்துரை விமலநாதன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 

மேலும் யாழ்.மாவட்ட செயலகத்திடம் 2012 ஆண்டு திகதி இடப்பட்ட கடிதத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு அதிகமான (3,441,300.00) நிதி கடனாகப் பெறப்பட்டுள்ள நிலையில் சுமார் 1 கோடி ரூபாய் மட்டும் மீள செலுத்தப்பட்டுள்ளபோதும் மீதி சுமார் 2 கோடி (2,441,300.00)ரூபாய்கள் செலுத்த வேண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாது லங்கா சீமெந்து நிறுவனத்தில் சுமார்  250 மேற்பட்டவர்கள் இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு தெரியாமல் இரும்புகளை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் இரும்பின் கொள்முதல் விலை சுமார் 60 ரூபாய்க்கு மேல் காணப்படுகின்ற நிலையில் 

20 தொடக்கம் 25 ரூபாய்க்கு லங்கா சீமெந்துத் தொழிற்சாலையின் இரும்புகளை தென்னிலங்கைக் எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு திறந்த விலை மனு கோரல் இன்றி இரும்புகளை எடுத்துச் செல்லும் நோக்கமானது தமது தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதியை செலவு செய்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவா? 

என்ற கேள்வியை எழுப்பினார். கடந்த காலங்களில் சீமெந்து தொழிற்சாலையில் இருந்து திருடப்பட்ட இரும்புகள் தொடர்பில் வெளிப்படுத்திய எனக்கு 33 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையிலும் ஏனைய சக உத்தியோகத்தர்களை இடைநடுவில் மட்டுப்படுத்தப்பட்ட கொடுப்பனவை கொடுத்து இடைநிறுத்தியுள்ளனர்.

ஆகவே திறந்த விலை மனுக் கோரல் இன்றி திருட்டுத்தனமாக தமக்கு இசைந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ள இரும்புகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு