முதல்வர் மணிவண்ணன் கைது - பாசிச ஆட்சியின் உச்சம்!
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த கைது சம்பவம் இனவாத நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
இந்த அரசின் பாசிச ஆட்சியை நோக்கிய நகர்வுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இன மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பின்மை மோசமாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.