யாழ்.மாநகரில் PCR பரிசோதனை செய்து கொள்ளாத 100ற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் PCR பரிசோதனை செய்து கொள்ளாத 100ற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..

யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதி விடுவிக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத 100ற்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்.மாநகரம் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 7ம் திகதி முடக்கல் நீக்கப்பட்டு 75 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த மிகுதி வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் நேற்று சுகாதார பிரிவினர் நடத்திய சோதனையின்போது பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத 100ற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து இன்று காலை துரையப்பா விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைக்கு வருமாறு அவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன் பி.சி.ஆர் பரிசோதனைக்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு