நீல சட்டையை கண்டால் புலிகளின் காவல்துறை ஞாபகம் வருகிறதென்றால் ஒரு தாசப்தம் கடந்த பின்னும் பொலிஸார் குலைநடுக்கத்தில் இருப்பதையே அது காட்டுகிறது..!

ஆசிரியர் - Editor I
நீல சட்டையை கண்டால் புலிகளின் காவல்துறை ஞாபகம் வருகிறதென்றால் ஒரு தாசப்தம் கடந்த பின்னும் பொலிஸார் குலைநடுக்கத்தில் இருப்பதையே அது காட்டுகிறது..!

நீல நிற சட்டையை கண்டால் புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்தது என சொல்வது எல்லா பற்றைக்கு பின்னாலும் பூதம் இருப்பதாக கூறுவதுபோல் ஒரு தசாப்தத்தின் பின்னரும் பொலிஸார் பயந்து, குலை நடுங்கிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஆண்கள் அணியும் பொதுவான நிறம் நீல நிறம். காக்கியுடையை அணிந்தால் பாதுகாப்பு பிரிவின் உடையை அணிந்து விட்டார் என சொல்வார்கள். 

கொழும்பு மாநகரசபையில் வாகன சிட்டை அறவிடுபவர்கள் இதேபோன்ற ஒரு ஆடையைத்தான் அணிந்திருப்பார்கள். நீதிவான் பொலிசாரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். ஊழியர்களின் உடையில் புலிகளின் இலச்சினை உள்ளதா என. 

பொலிசார் இல்லையென்றார்கள். அதற்கு மேலதிகமாக நாம், அவர்களுடைய சீருடையில் இருந்தது யாழ்.மாநகரசபையின் இலச்சினை. வேறு மாநகரசபையினால் செய்ய முடிந்ததை ஏன் யாழ் மாநகரசபையினால் செய்ய முடியாது. 

ஒரேநாடு ஒரே சட்டம் என கூரையிலிருந்து கூவிக்கொண்டிருந்தால் போதாது. அது நடைமுறையில் இல்லையென்பதை பொலிசார் இன்று நடைமுறையில் காண்பித்துள்ளனர் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு