யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் நிபந்தனையுடன் ஞாயிற்று கிழமை திறக்கப்படுகிறது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் நிபந்தனையுடன் ஞாயிற்று கிழமை திறக்கப்படுகிறது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை நாளை மறுதினம் ஞாயிற்று கிழமை தொடக்கம் திறப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகர்கள், பணியாளர்கள், சந்தை வியாபாரிகள் தமது வர்த்தக நிலையங்கள், மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. தொற்று உறுதிப்படுத்தப்படாத வர்த்தகர்கள் ஞாயிற்று கிழமை தொடக்கம் தமது வியாபார நடவடிக்கையை ஆரம்பிக்கலாம். 

மேலும் திறக்கப்படும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், சந்தை வியாபாரிகள் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டமைக்கான அத்தாட்சிப்படுத்தலை வைத்திருக்கவேண்டும். என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் மாகாண சுகாதார பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு