யாழ்.கொடிகாமத்தில் குடும்பஸ்த்தர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு..!

யாழ்.தென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் தனிமையில் வசித்த குடும்பஸ்த்தர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடமியன், கொடிகாமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இராமேஸ்வரன் 41 வயது என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி வருகை தந்து விசாரணையை மேற்கொண்டுள்ளார்.