யாழ்.நிலவரை மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றை நான் நோில் வந்து பார்க்கும்வரை எந்த அகழ்வு பணிகளும் நடக்காது..!
யாழ்.நிலாவரை மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட வடக்கில் தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ள இடங்களை நான் பார்வையிடாமல் எந்தவொரு அகழ்வு பணிகளும் இனி இடம்பெறாது.
மேற்கண்டவாறு தொல்பொருள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்துள்ளார். இன்றைய தினம் வடக்கில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போதே அமைச்சர் மேற்படி உத்தரவாதத்தை வழங்கியிருக்கின்றார். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் திடீரென தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில்
மக்கள் அதிருப்த்தி அடைந்துள்ளனர். என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அதுமட்டுமல்லாது தொல்பொருள் விடயங்களை ஆய்வு செய்யும்போது மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தெரிவிக்காமல் தொல்பொருள் அதிகாரிகள் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதால் அந்தப் பகுதிகளில் குழப்பமான சூழ்நிலை ஏற்படுவதாகவும்
அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் விதுர விக்ரமநாயக்க வடக்கில் இடம்பெறும் தொல்பொருள் விடயங்கள் தொடர்பாக அந்தந்த மாவட்டங்களின் பிரதேச
மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு தெளிவுபடுத்த பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். தற்போது சர்ச்சையில் உள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் நிலாவரை கிணறு ஆகிய பிரதேசங்களுக்கு நான் வந்து ஆராயும்வரை
அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படாது. தொல்பொருள் தாம்பந்தமான அகழ்வாராய்ச்சிகள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள பிரதேசசபை, பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் ஆகியவற்றிற்கு அகழ்வாராச்சி தொடர்பாக திணைக்களத்தினால்
முன் கூட்டியே அறிவுறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் யாழ்.மாவட்டத்தில் கடமையில் உள்ள தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களில் பெரும்பாலானவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவே கடமையில் உள்ள நிலையில்
அவர்களை குறித்த துறையின் விடயதானங்களில் முடிவெடுக்கக் கூடிய பதவி நிலைகளுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அங்கஜன் அமைச்சர் முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் விதுர தற்போதுள்ள உத்தியோகத்தர்களுக்களை
தகுதி அடிப்படையில் மாவட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களாக நியமிப்பதற்கு விரைவில் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் என தெரிவித்தார். மேலும் கிளிநொச்சி உருத்திரபு முனீஸ்வரர் ஆலயம் பகுதி தொடர்பில்
அப்பகுதிக்கு பொறுப்பான தொல்பொருள் அதிகாரியுடன் அங்கஜன் இராமநாதனையும் உடன் சென்று பார்வையிடுமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.