SuperTopAds

அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் விதைப்பு ஆரம்பம்

ஆசிரியர் - Editor III
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் விதைப்பு ஆரம்பம்

அம்பாறை  மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் விதைப்பு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நிந்தவூர் ,சம்மாந்துறை ,நாவிதன்வெளி, சவளக்கடை ,13 ஆம் கொலனி ,மத்தியமுகாம், சொறிகல்முனை ,மல்வத்தை, உஹன ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, கோமாரி ,தம்பிலுவில் , உள்ளிட்ட பல விவசாய பகுதிகளில் சிறுபோக நெல் விதைப்பினை  விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர் .

குறிப்பாக இவ்விதைப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் உழவு இயந்திரம் மற்றும் எருதுகளின் துணையுடனும் மேற்கொண்டுள்ளதுடன் கால்வாய்களில் வடிந்தோடும்   நீரினை முறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும்  சிறுபோக நெல் விதைப்பு  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் வயல் காணிகளில் புதிய வகை கொக்கு இனங்களும் வருகை தந்துள்ளன.

அத்துடன் இம்முறை அம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான  ஹக்டெயரில் நெல் விதைப்பு இடம்பெற்று வருவதுடன் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை விவசாயத்திணைக்களம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.