யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 8 பேருக்கு தொற்று உறுதி..! யாழ்.மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 8 பேருக்கு தொற்று உறுதி..! யாழ்.மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவு..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 3 பேருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் நோய் அறிகுறிகளுடன் அனுமதிப்பட்ட ஒருவருக்கும்

தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 352 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டதாகவும், கோண்டாவிலை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார். 

 

Radio