யாழ்.மாவட்ட மக்களுக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!
யாழ்.மாநகர முடக்கம் இன்று தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள் தங்களதும், தங்கள் குடும்பத்தினதும், சமூகத்தினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயற்படுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இதுவரை கிடைத்த PCT முடிவுகள் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் முடக்கம் தளர்த்தப்படுகிறது. இதேபோல் பயணிகள் பேருந்து சேவைகளையும் வழக்கமான இடங்களில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
அதனோடு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்.நகருக்குள் அதிகளவான மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.
வர்த்தகர்களும் சுகாதார நடைமுறைகள் பேணப்படுவதை உறுதி செய்யவேண்டும். சமூகத்தினது பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். என பணிப்பாளர் கேட்டுள்ளார்.